Bigg Bossல கணவர பத்தி ஏன் பேசவே இல்ல, லைவில் கேட்ட ரசிகர்களுக்கு பிரியங்கா கொடுத்த பதில்.

0
1353
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். பின் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ்ஸில் பிரியங்கா:

அதோடு பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்று அடிப்படையில் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 15 வாரம் இருந்தார். அதனால் 15 * 2 laks = 30laks. ஆகமொத்தம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பணம் 30 லட்சம். இதில் 30% டாக்ஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா உடைய வீடியோ:

இப்படி ஒரு நிலையில் பிரியங்கா உடைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பிரியங்கா அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முதலாக லைவ்வில் வந்திருக்கிறார். அதில் அவருடைய ரசிகர்கள் எல்லோரும் பிரியங்காவிற்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். அதற்கு பிரியங்கா எனக்கு ஆதரவாக சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. அதே போல் என்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள். இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பிரவீன் பற்றி பிரியங்கா சொன்னது:

இப்படி போயிருக்கும் நிலையில் உடனே பிரியங்கா ரசிகர்கள் எல்லோரும் பிக்பாஸ் வீட்டில் ஏன் பிரவீனை பற்றி பேசவில்லை. பிரவீன் எங்கே? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பிரியங்கா, எல்லோரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு வெளிவந்த வீடியோவிலும் பிரியங்கா பிரவீனை பற்றி கேட்டதற்கு அவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சம்.

கேள்வி எழுப்பும் ரசிகர்கள்:

அதுமட்டுமில்லாமல் அவர் கேமரா முன்பு அதிகமாக வர மாட்டார் என்று கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஒருவேளை இதனால்தான் பிரியங்கா, பிரவினை பற்றி பேசவில்லையோ? இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா? என்பதை பிரியங்காவின் அடுத்த வீடியோ வரும் வரை பொறுத்திருக்கலாம். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா, நிரூப்புடன் வெளியே சென்றிருந்த புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டு இருந்தார். ஆனால், தன் கணவருடன் எடுத்த ஒரு புகைப்படம் கூட பதிவிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Advertisement