விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் மூன்று வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர். பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள்.

இதையும் பாருங்க : விவாகரத்து சர்ச்சை, வழக்கு தொடர்ந்த சமந்தா – கோபமடைந்த நீதிபதி. அப்படி என்ன சொன்னார் பாருங்க.

Advertisement

ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொள்ளும் விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கி இருக்கின்றனர். கடந்த வாரம் கமல், யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கேட்ட போது கூச்சமில்லாமல் கையை தூக்கி நான் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறினார் அபிஷேக்.

அதற்க்கு முன்பாகவே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மேடையில் தர குறைவாக பேசிய வீடியோ வைரலானது.அதே போல பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று சொன்ன அபிஷேக், நாடியாவை வனிதா என்றும் மதுவை லாஸ்லியா என்றெல்லாம் ஒப்பிட்டார். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் கூட அபிஷேக்கை பிக் பாஸ் பார்த்ததே இல்லையா என்று கேட்ட போது, பார்த்தது இல்லை, ப்ரோமோ மட்டும் பார்ப்பேன், நீங்க வார நாட்கள்ல மட்டும் பார்ப்பேன் என்றெல்லாம் உளறினார் அபிஷேக்.

Advertisement

இதை கேட்டு கமலே சிரித்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கின் இந்த அந்நியன் பேச்சால் கடுப்பான காமெடி நடிகர் சதிஷ் ‘ஏன்யா அது என்ன பிட்டு படமா, பாத்தா பாத்தேனு ஒத்துக்கோயேன். அதுக்கு ஏன் இவ்ளோ பர்பாமன்சு’ என்று கலாய்த்து உள்ளார். அதே போல நடன இயக்குனரான சதிஷ்ஷும் தன் பங்கிற்கு ‘அபிஸ்னேக், பிரியங்கா யாருபா சாமி நீங்க, Error 404 found பிக் பாஸுக்குள்ள போய்டுச்சி’ என்று கலாய்த்து உள்ளார்.

Advertisement
Advertisement