விவாகரத்து சர்ச்சை, வழக்கு தொடர்ந்த சமந்தா – கோபமடைந்த நீதிபதி. அப்படி என்ன சொன்னார் பாருங்க.

0
3483
samantha
- Advertisement -

சமந்தா தொடர்ந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கோபமடைந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். பின் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இவர்கள் கூடிய விரைவில் பிரிய போவதாகவும் என்று சோஷியல் மீடியாவில் பல தகவல்கள் வந்து இருந்தது.

-விளம்பரம்-

இது எல்லாம் வதந்திகளாக போய்விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இவர்கள் இருவருமே அதிகாரபூர்வமாக இருவரும் பிரிய இருப்பதாக அறிவித்தனர். இதைக் கேட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அதிர்ந்து விட்டனர். மேலும், இவர்களுடைய பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். சோசியல் மீடியாவை ஓபன் பண்ணாலே போதும் இவர்களுடைய விவாகரத்து விவகாரம் தான். அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் கருத்துக்களும் வதந்திகளும் பரவி வந்தது.

இதையும் பாருங்க : வாட்ஸ் அப் சேட்டில் கஞ்சா பற்றி மெசேஜ் – விசாரணையில் 22 இளம் நடிகை சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்.

- Advertisement -

இந்நிலையில் சமந்தா அவர்கள் தன்னுடைய விவாகரத்து குறித்து அவதூறாக தகவலை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடிகை சமந்தாவின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கேட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பயங்கரமாக கோபம் அடைந்து விட்டார். பின் நீதிபதி கூறியது, சம்பந்தம்ப்பட்ட சேனல்கள் மீது சமந்தா வழக்கு தொடர்வதை விட அவர்களை அழைத்து மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்.

பொதுவாகவே நடிகர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொது தளத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களை அவதூறாக பேசுகிறார் என்று வழக்கு தாக்கல் செய்கிறார்கள். இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. சமந்தாவின் வழக்கு நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறியுள்ளார். இப்படி நீதிபதி கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement