வெளிநாடா இருந்தா எனக்கு என்ன ? நடு ரோட்டில் விஜய் டிவி பிரியங்கா செய்த செயல் – வைரல் வீடியோ.

0
583
Priyanka
- Advertisement -

நடுரோட்டில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-
priyanka

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரியங்கா பற்றிய தகவல்:

மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா நடனமாடும் வீடியோ:

அதேபோல் சமீபத்தில் ஒளிபரப்பான ராஜு வூட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சியும் நடத்தி வைக்கிறார். இதுதவிர சில நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்காவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கனடாவிற்கு விடுமுறை நாளை கொண்டாட பிரியங்கா சென்று இருக்கிறார். அங்கு அவர் மிகவும் சந்தோஷமாக நடுரோட்டில் டான்ஸ் ஆடுகிறார். அந்த வீடியோவை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரியங்கா பதிவிட்டிருக்கிறார்.

Advertisement