‘நீங்க ரொம்ப விஷம்’ – பிரியங்காவை பற்றி பிரபல விஜய் டிவி தொகுப்பாளரே இப்படி சொல்லிட்டாரே. யார் பாருங்க.

0
852
priyanka
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

-விளம்பரம்-

தாமரையை சீண்டிய பிரியங்கா :

நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இந்த டாஸ்கின் போது தான் தாமரைக்கும் – பிரியங்காவிற்கும் மிகப்பெரிய வாக்கு வாதம் வெடித்தது. இந்த டாஸ்க் ஆரம்பித்த முதலே தாமரையை தொடர்ந்து சீண்டிவிட்டு கொண்டே இருந்தார் பிரியங்கா. அதிலும் தாமரையை ‘த்து’ என்று பிரியங்கா சொல்ல தாமரை செல்வியும் பதிலுக்கு பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டினார்.

- Advertisement -

ஒரு முறை செய்ததற்கு 10 முறை செய்த பிரியங்கா :

ஒரு கட்டத்தில் தாமரை, பிரியங்காவின் முட்டையை உடைக்க சென்ற போது பிரியங்கா, தாமரையை நீக்கி தள்ளி கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான தாமரை, பிரியங்காவை மிகவும் வேகமாக தள்ளிவிட்டார். தாமரையின் இந்த தாக்குதலை சற்றும் எதிர் பாராத பிரியங்கா, பிக் பாஸிடம் இதை முறையிட்டார். அதே போல தாமரை ஒரு முறை தன்னை ஓங்கி தள்ளியதற்கு தாமரையை ‘இப்போ நீ என்ன பண்ண, என்ன பண்ண’ என்று பல முறை தள்ளிவிட்டார் பிரியங்கா.

பிரியங்கா குறித்து ஜேம்ஸ் வசந்தன் :

இந்த விவகாரத்தில் தாமரைக்கு ஆதரவாக சிலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வந்தனர். அதிலும் தாமரைக்கு ரெட் கார்ட் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று பிரியங்காவின் ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ரெண்டு பேரும் மாறி மாறி தள்ளிக்கொண்டு இருந்தனர். அதிலும் பிரியங்கா தான் தாமரையை இரண்டு மூன்று முறை தள்ளினார். அதற்க்கு தாமரையும் தள்ளினார், அதனை உடனே ‘பிக் பாஸ் இவ என்ன அடித்துவிட்டாள் ‘ என்று திரித்து பேசுகிறார். பிரியங்கா நீங்க ரொம்ப விஷம் பிரியங்கா.

நீங்க ரொம்ப விஷம் பிரியங்கா :

வெளிய வந்து இத பாருங்க :

நீங்கள் எவ்ளோ நல்லவரா அதை விட அதிகமாக கெட்ட தன்மையும் இருக்கிறது. எல்லாருக்குள்ளும் கெட்ட குணம் இருக்கிறது. ஆனால், இவ்ளோ மோசமா நீங்கள் திரித்து பேசுவீர்கள் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நீங்கள் வெளியில் வந்த பின்னர் இந்த எபிசோடை பாருங்க. நீங்க அப்பட்டாமா பொய் பேசுனது ரொம்ப விஷமமா இருக்கு என்று கூறியுள்ளார்.

Advertisement