‘திரும்ப வந்துட்டேனு சொல்லு ‘மீண்டும் தொகுப்பாளினியாக வந்த பிரியங்கா – எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

0
1236
priyanka
- Advertisement -

மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள பிரியங்காவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக பிரியங்கா விளங்கி வருகிறார். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். மேலும், இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா:

இந்த பிரபலத்தின் மூலம் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதோடு பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Priyanka

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா சம்பளம்:

மேலும், பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என்று அடிப்படையில் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டில் 15 வாரம் இருந்தார். அதனால் 15 * 2 laks = 30laks. ஆகமொத்தம் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பாதித்த பணம் 30 லட்சம். இதில் 30% டாக்ஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் பேட்டியும் கொடுத்திருக்கிறார். அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி :

அதற்கேற்றார் போல் விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனல், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் படப்பிடிப்பில் பிரியங்கா:

அது மட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர் படப்பிடிப்பிலிருந்து பின்னணி பாடகி பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வந்துவிட்டாயா! என்று வாழ்த்துக் கூறி அவருடைய புகைப்படத்தை லைக் செய்து வருகிறார்கள்.

Advertisement