BiggBoss promo-4..! விஜய் டிவி வெளியிடாத இன்றைய வீடியோ..! பாலாஜி Out..!
பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது இதனால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகளும் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஜனனியை தவிர போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வார பஸ்ஸர் டஸ்கில் ஏற்கனவே விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஜனனி, யாஷிகா ஆகியோர் பங்கேற்று விட்டனர். இந்நிலையில் இன்று 3 புரோமோக்களும் வெளியான நிலையில் சமீபத்தில் 4 வது ப்ரோமோ வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பாலாஜி பஸ்ஸர் டாஸ்க்கை விளையாடுவது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக விஜய் டிவியில் ஒரு நாளைக்கு மூன்று ப்ரோமோ மட்டுமே வெளியாகும். ஆனால், தற்போது லீக் ஆகியுள்ள இந்த ப்ரோமோ இன்னும் விஜய் தொலைக்காட்சியிலோ, விஜய் தொலைகாட்சியின் ட்விட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் கூட வெளியாகவில்லை என்பது குறியிடத்தக்கது.vijay tv unpublished promo 4 pic.twitter.com/VaYaL942lV
— Swathy Rekha (@swathyrekh) September 18, 2018