அதுக்கு இங்கிலிஷ்ல அதான் அர்த்தம்,எடுத்து பாருங்க – ரியோவிற்கு பதிலடி கொடுத்த ஆரி.

0
2558
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, சுசித்ரா, ஜித்தன் ரமேஷ் ஆகிய 8 பேர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அர்ச்சனா வெளியேறி இருந்தார். கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர் . எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

- Advertisement -

இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அர்ச்சனா வெளியேறியதால் தன்னுடைய கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்துவிட்டு சென்றார் அர்ச்சனா. இதனால் முதல் முறையாக வீட்டின் தலைவரானதோடு மட்டுமல்லாமல் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார் பாலாஜி. இப்படி ஒரு நிலையில் ‘Ball Catch’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றய நிகழ்ச்சியில் கூட இதே டாஸ்க் நள்ளிரவு வரை தொடர்ந்தது.

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான போரிங் பர்பாமராக அனிதா பாலாஜியை தேர்ந்தெடுத்து இருந்தார். இதனால் இருவரும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோபோவில் ஆரி, ரியோவை போரிங் போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், ரூல் புக்கில் குழுவாக விளையாட கூடாது என்பதற்கு குரூப்பாக விளையாட கூடாது என்பது தான். அதுக்கு இங்கிலிஷ்ல அதான் அர்த்தம் என்று கூறியுள்ளார் ஆரி.

-விளம்பரம்-
Advertisement