யார் அந்த மமூணு பேரு – ஆரியிடம் பாலாஜி கேட்ட நச் கேள்வி.

0
3753
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். இதில் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-

கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

- Advertisement -

இதில் எதிர்பார்த்தது போலவே நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ச்சனா வெளியேறியதால் தன்னுடைய கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்துவிட்டு சென்றார் அர்ச்சனா.

இதனால் இந்த வார நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்து விட்டார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது.தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஒரு ஜாலியான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் கேள்வியை கேட்க வேண்டும். அந்த வகையில் ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கும்போது. பாலாஜி, ஆரியிடம் ஒருவேளை நீங்கள் பைனலுக்கு சென்றால் உங்களுடன் எந்த 3 பேர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement