இன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா ? பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.!

0
38291
- Advertisement -

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அதற்கு ஏற்றார் போல இன்றைய நிகழ்ச்சியின் எந்த ப்ரோமோவும் இதுவரை வெளியாகிவில்லை. வழக்கமாக வார நாட்களில் காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 3 மணிக்கும் ப்ரோமோ வெளியாவது வழக்கம். அதுவே சனி மற்றும் ஞாயிறு என்றால் எந்த நேரத்தில் இருக்கும். இருப்பினும் சனி மற்றும் ஞாயிறுகளில் குறைந்தபட்சம் மதியம் 12 மணிக்காவது முதல் ப்ரோமோ வெளியாகிவிடும்.

இதையும் பாருங்க : 90 ஸ் கிட்ஸ்ஸின் அபிமான விமர்சகர் இப்போ யூடுயூபில்.! மீம்ஸ்களை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்.!

- Advertisement -

ஆனால், இன்றோ 3 மணி ஆன நிலையிலும் முதல் ப்ரோமோ வெளியாகவில்லை. மேலும், தொலைக்காட்சியில் கூட எந்த ஒரு ப்ரோமோவும் வெளியிடபடவில்லை. இதனால் மதுமிதா தற்கொலைக்கு முயன்ற செய்தி உண்மையாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் இன்னும் ப்ரோமோ ஒளிபரப்பபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க உலக நாயகன் கமல், இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் பிக் பாஸ் படப்பிடிப்பிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கமல் இல்லாமல் கூட இன்றைய ப்ரோமோவை வெளியிட்டுருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.

-விளம்பரம்-
Advertisement