அவங்களோடெல்லாம் நான் Distance Maintain செய்வேன் – பிக் பாஸிடம் சொன்ன ரம்யா.

0
1373
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

-விளம்பரம்-

எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அடுத்த வர கேப்டன் பதவிக்கான போட்டியில் ரம்யா பாண்டியன், பாலாஜி மற்றும் அர்ச்சனா தேர்தெடுக்கபட்டனர். மேலும், மிகவும் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்கள் என்று ஷிவானி மற்றும் கேப்ரில்லா ஓய்வு எடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் ரம்யா, அர்ச்சனா, பாலா மூவருக்கும் தலைவர் பதவிக்கான போட்டி துவங்கி இருக்கிறது. இதில் அர்ச்சனா வெற்றி பெற்றது போலத் தான் தெரிகிறது. ஒருவேளை அர்ச்சனா இந்த வாரம் வெளியே போகவில்லை என்றால் அவர் அடுத்த வார தலைவர் ஆகி காப்ற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே போல இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ரோபோவில் ரம்யாவை கண்களுக்கு பிக்பாஸ் அழைத்திருக்கிறார் இதில் ரம்யா எனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் நான் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement