சாப்பிட்டு தூங்குனதுக்கு இவ்ளோ சம்பளம் வாங்குன ஒரே ஆள் குயின்ஸியா இருப்பாங்க – எவ்வளவு தெரியுமா ?

0
565
queency
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏழாவது எவிக்ஷனில் வெளியேற இருக்கும் நபரை குறித்தும் அவரது சம்பளம் குறித்தும் தற்போது சோசியல் மீடியாவில் தகவலானது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். அதில் ஒருவர் தான் குயின்சி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

- Advertisement -

இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின்பு ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குயின்சி. அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரது வசீகர தோற்றதால் இவருக்கு ரசிகர்கள் கூடினார்கள்.

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் விதத்தை பார்த்து இவரை மிச்சர் லிஸ்டில் சேர்த்துவிட்டனர் ரசிகர்கள். அதுவும் இவர் பிக் பாஸ் வீட்டில் தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்யாமல் இருப்பது என்று தான் இருக்கிறார் என்று பலர் கேலி செய்து வருகின்றனர். அதே போல தனக்கு சிக்கன் வேண்டும் என்று பிக் பாஸிடம் இவர் கேட்க அதனை பிக் பாஸ் அனுப்பி வைத்ததில் இருந்தே இவரை கோட்டா குயின்சி என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் இவர் தூங்கினால் நாய் குலைக்க கூடாது என்று பிக் பாஸிடமே முறையிட்டார். இதனால் இவரை நெட்டிசன்கள் பலரும் சமூக வளைத்ததில் வறுத்தெடுத்து வருகின்றனர். இவரை Troll செய்து பல விதமான மீம்கள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், குயின்சி தனது PR டீமினால் தான் இத்தனை வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாறாமல் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் குயின்சி பெயரும் இடம்பெற்றிருந்தது, தனலட்சிமி, கதிர் மற்றும் ரட்சிதா எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்ட நிலையில் மைனா நந்தினி, ஆயிஷா மற்றும் குயின்ஸி குறைவான வாக்குகள் பெற்று கடைசி முற்று இடங்களில் உள்ளனர். அதில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து தற்போது குய்ன்ஸி வெளியேறி இருக்கிறார்.

இவர் வெளியேறியது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். இந்நிலையில் இவருக்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் கிடைத்து என்று தகவலானது தற்போது கிடைத்துள்ளது. அதாவது ஒருநாள் 15ஆயிரம் முதல் 20 வரை சம்பளமாக பேசப்பட்டு உள்ளே சென்றதாகவும், 54 நாட்கள் கடந்த நிலையில் குறைந்த பட்சம் 1 நாளைக்கு 15 ஆயிரம் ஏன வைத்துக்கொண்டால் இவருக்கு 8.1 லட்சத்திற்கு மேல் சம்பளமாக கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலானது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Advertisement