வெளிய என் Team எல்லாம் உனக்கு தான் வேல பாத்துட்டு இருக்கும் – மணிகண்டனிடம் ஓப்பான கூறிய போட்டியாளர்.

0
406
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழில் மொழியில் 6சீசன்கள் கடந்து இருக்கிறது. மேலும் சின்னத்திரை,வெள்ளித்திரை நடிகர்கள், ஷோசியல் மீடியா பிரபலங்கள், பாடகர்கள் என பலரும் பிக் பாஸில் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் இந்த சீசனில் தற்போது அரசியல் வாதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

கடந்த ஒரு மாதம் முன் துவங்கிய பிக் பாஸ் சீசன்6 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோளாறு, மெட்டிஒலி சாந்தி, செரீனா, மகேஷ்வரி, நிவாஷினி என மொத்தம் 21 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் போக 15 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பை கூட்ட பல வித்தியாசமான டாஸ்க்குகளை பிக் பாஸ் நிகழ்ச்சியானது கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வார தலைவர் போட்டியில் மைனா நந்தினி, மற்றும் தனலட்சிமி போட்டியிட்டனர். இதற்காக கால்பந்து போட்டியானது நடந்தது அதில் நடிகையும் தொகுப்பாளனியுமான மைனா நந்தினி இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த டாஸ்க்கிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இருந்தாலும் பின்னர் சமாதானமாகி விட்டனர். இந்நிலையில் எந்த சண்டையிலும் கலந்து கொல்லாமல் எந்த கண்டெண்டும் கொடுக்காமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருவதில் குய்ன்ஸியும் ஒரு போட்டியாளர் என்று சொல்லலாம்.

ஆனால் குய்ன்ஸி பிக் பாஸ் வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் இவருக்கு மற்றவர்களை விட அதிகமான ஓடுகள் கிடக்கின்றனர். இதனால் ஒருவேளை இவர் தான் எப்போதாவது எலிமினேஷன் பட்டியலில் இருந்தால் அவரை காப்பாற்ற ஒரு குழு வெளியில் இருக்கிறதா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யுமாறு குவீன்சி, தனக்காக வெளியில் பணிபுரியும் குழு ஓன்று பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருப்பதாகவும் அந்த குழு மணிகண்டாவை வாக்குகளை அதிகரிப்பதற்கு உதவி செய்வதை ஒப்புக்கொண்ட விடியோவானது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் போட்டியாளரான மணிகண்டா பாட்டு பாடிக்கொண்டே நான் அடுத்தவாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூற அதற்க்கு குய்ன்ஸி ‘இது உனக்கே ஓவரா தெரியல என்னுடைய டீம் உனக்காகத்தான் வெளியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். குய்ன்ஸி இப்படி கூறிய வீடியோ பதிவினை ரெகார்ட் செய்த நெட்டிசன் ஒருவர் அதனை ட்விட்டர் பதிவேற்றியதால் இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் கூட மற்றொரு போட்டியாளரான ராம் ரூ.100 கொடுத்ததை கொண்டதையும் அவருக்காக வேலை செய்யும் குழுவுக்கு 2.5 லட்சம் வழங்கப்படும் தகவல் ஏற்கனவே வெளியான நிலையில்` குய்ன்ஸி பேசிய இந்த விடியோவானது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement