ரஷிதா வீட்டில் நேர்ந்த பேரிழப்பு, தகவலை அறிந்து பெங்களூர் விரைந்த தினேஷ். ரசிகர்கள் ஆறுதல்.

0
478
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். த

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்தார் ரஷிதா. இப்படி திருமண வாழ்க்கையால் மன வருத்தத்தில் இருக்கும் ரஷிதாவிற்கு அடுத்த பேரதிர்ச்சியாக அவரது தந்தை காலமாகி இருக்கிறார்.

ரஷிதா பிக் பாஸில் இருந்த போது தனது கணவரை பிரிந்த காரணம் பற்றி சொன்ன போது நமக்கு எப்போதும் அம்மா அப்பா தான் முக்கியம் ஆனால், பெற்றவர்களுக்கே நீ அதை செய்ய கூடாது, இதை செய்ய கூடாது என்று சொல்லும் உறவில் நாம் ஏன் இருக்க வேண்டும் அப்படி ஒரு உறவே வேண்டாம் என்று கூறி இருந்தார். அதே போல பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதி அதை படித்துக்காட்டி கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

அப்போது ரஷிதா எழுதிய கடிதத்தை படித்து காண்பித்து இருந்தார். அதில் ‘எனக்கு குழந்தை அமைப்பு இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய அம்மா தான் என்னுடைய குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை எனக்கு கடைசி வரை கொடுக்க வேண்டும். இதற்குப் பின்னர் இனி எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வதற்கு தயாராக இருக்கிறேன் அம்மா’ என்று கண்ணீர் மல்க அந்த கடிதத்தை படித்திருந்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரக்ஷிதா இன்னும் சட்டப்படி விவகாரத்து பெறவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தனது பெற்றோர்களை காண பெங்களூருக்கு தான் அதிகம் செல்வார். மேலும,  அப்பாவின் உடல் நலன் சரியில்லாததால் ரச்சிதா ஏற்கெனவே தந்தையை உடனிருந்து கவனித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அவரது தந்தை காலமானது ரக்ஷிதாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ரஷிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் தினேஷ், இன்னமும் ரஷிதாவுடன் எப்படி யாவது சேர்ந்துவிடவே பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் ரஷிதா புடிகொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் சென்னையிலிருந்த தினேஷுக்கு ரச்சிதாவின் வீட்டிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட, தற்போது அவர் பெங்களூரு விரைந்திருக்கிறார். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் மனைவியைச் சந்தித்ததாகச் சொன்ன தினேஷ் இப்படியான ஒரு துக்க நிகழ்வில் மீண்டும் மனைவியைச் சந்திக்கிறார்.

Advertisement