மைனா தெரிஞ்சும் இப்படி பண்றது தான் ஏத்துக்க முடியல – தன் மனைவியிடம் அத்துமீறும் ராபர்ட் குறித்து ரஷிதாவின் கணவர்.

0
405
rachitha
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள ரட்சிதாவை பற்றி ஷோசியல் மீடியாவில் நிகழ்ந்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையாக ரட்சித்தாவின் கணவர் தினேஷ் பேசியிருப்பது தற்போது ஷோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கி ஒருமாதம் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரான ரட்சிதா விடம் பழகிவரும் ராபர்ட் மாஸ்டர் குறித்து போட்டியாளர்களும் சரி பிக் பாஸ் ரசிகர்களுக்கும் சரி பலவிதமான கருத்துக்களை கூறி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் இதற்குத்தான் நடிகர் தினேஷ் தன்னுடைய கருத்துக்களை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

ரட்சித்தாவின் கணவர் :

பிரபல சின்னத்திரை நடிகையான ரட்சிதாவை சின்னத்திரையில் அறியாத ஆளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பல தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். மேலும் ரட்சிதா உப்புக்கருவாடு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தினேஷ் கோபாலசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சில கருது வேறுபாடுகளால் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படும் நிலையில்தான் ரட்சித்தா பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். கலந்து கொண்டதிலிருந்தே இவரையும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டரயும் வைத்து பல விதமாக சோஷியல் மீடியாக்களில் பேசிவரும் நிலையில்தான் தற்போது இவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

சொல்லி புரிய வைத்திருக்கலாம் :

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்தே மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படியிருக்கும் போது அதற்கு முன்னர் ஒரு டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் ரட்சித்தாவிடம் பேசும்போது ‘நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும்’ என கூறியது அன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகி இருந்தது. அதனை மைனா உள்ளே சென்றதும் ரட்சித்தாவிற்கு சொல்லு புரிய வைத்திருக்கலாம். ஏனென்றால் மைனா மற்றும் ரட்சிதா பல சீரியல்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் மேலும் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். ஆனால் மைனா நந்தினி மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து இப்படி செய்வது வருத்தமளிக்கிறது என கூறினார் ரட்சித்தாவின் கணவர் தினேஷ்.

இதுதான் உண்மையான நட்பா? :

மேலும் ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்களை ஊக்கு விக்கும் வகையில் நடந்து கொள்ளும் மைனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு ஒரு டாஸ்கில் விக்ரமன் ரட்சித்தாவிற்கு தலை கவசம் அணிவதற்கு உதவி செய்திகொண்டிருப்பர். அதனை பார்த்து கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டரை பார்த்து மைனா என்ன பீலிங்கா? என்று கேட்பதெல்லாம் ஒரு உண்மையான தோழி செய்யும் செயலா. ராட்சத்தாவிற்கு ஏற்கனவே கணவர் இருக்கிறார் என்று தெரிந்து கூட ‘கண்டெண்டுக்காக’ இப்படி பொது இடத்தில பேசுவது ரட்சித்தாவின் பெயரை கெடுக்கும் விதமாக இருக்கிறது என கோவப்பட்டிருந்தார்.

-விளம்பரம்-

ரட்சிதா நல்லவர் :

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதிலிருந்தே வீட்டில் உள்ளவர்களிடம் ரட்சிதா நான் என்னுடைய விளையாட்டை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் என்னை வைத்து வேறு விதமாக விளையாடுகிறீர்கள் என்று கூறியிருந்தார்.மேலும் மற்ற போட்டியாளர்களை விடவும் ரட்சித்தாவை நன்றாக தெரிந்த மைனாவும் இப்படி செய்வதுதான் ஏற்று கொள்ள முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் நிலை தெரிந்துதான் ரட்சிதான் எந்த பிரச்னையும் வேண்டாம் என்று ராபர்ட் மாஸ்டருடன் எனோ தானோவென்று பேசிகொன்றிருக்கிறார்.

ஆறுதல் கூறும் நெட்டிசன்கள் :

மேலும் பல நேரங்களில் ராபர்ட் மாஸ்டர் தனக்கு அண்ணண் போன்றவர் என்று கூறிவருகிறார். இப்படி ரட்சிதாவுடன் பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடைய மனைவி என்று அவரை விட்டுக்கொடுக்காமல் பேசிய நடிகர் தினேஷ் கோபாலசாமியை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement