நண்பர்களை அழைத்துக்கொண்டு தமிழ் புத்தாண்டில் புதிய காரை வாங்கிய ரக்ஷிதா – என்ன கார் ? விலை எவ்ளோ தெரியுமா ?

0
376
rachitha
- Advertisement -

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிக் பாஸ் ரக்ஷிதா புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

-விளம்பரம்-

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் கமிட்டானார்.

- Advertisement -

ரக்ஷிதா நடித்த சீரியல்கள்:

இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து இருந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை திடீரென்று முடித்து விட்டார்கள். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

ரக்ஷிதா குடும்பம் குறித்த தகவல்:

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக தினேஷிற்கு சமீப காலமாக சீரியலில் வாய்ப்பு இல்லாததால் தான் ரஷிதா அவரை பிரிந்து விட்டார் என்றும் கூறிவந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டருடன் இவர் நெருங்கி பழகியிருந்தது குறித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா:

ஆனால், ரக்ஷிதா அவரை ஒரு நண்பராக பார்த்ததாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரக்ஷிதா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படம் வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கார் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, புதிய ஆண்டு… புதிய தொடக்கம்… வெல்கம் ஹோம் எம்ஜி ஹெக்டர் என்று பதிவிட்டு இருக்கிறார்.

ரக்ஷிதா வாங்கிய புது கார்:

அதாவது, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரக்ஷிதா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். புது கார் முன்பு எடுத்த புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் பிக் பாஸ் சீவினும் உடன் இருக்கிறார். மேலும், சிவப்பு நிறத்தில் எம்ஜி ஹெக்டர் என்ற காரை தான் வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை 22 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ரக்ஷிதாவின் புது கார் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement