‘ஏன் இவ்ளோ வன்மம்’ தினேஷுடன் சண்டையிடம் விசித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்ட ரஷிதாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
254
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் Wild Card மூலம் உள்ளே நுழைந்தவர் தினேஷ். இவருக்கும் ரஷிதாவிற்கும் இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். தினேஷ் உள்ளே சென்ற நாள் முதலே பலரிடமும் எதிர்ப்பய் சம்பாதித்து கொண்டார். அதிலும் கடந்த சில நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துகொண்டு இருக்கிறது.அதிலும் கடந்த சில தினங்களாக இருவரும் சரியாக பேசிக்கொள்வது கூட இல்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விசித்ரா குறித்து ரஷிதா போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சமீபத்தில் விசித்ரா புகைப்படத்தை பகிர்ந்து சிங்கப்பெண்ணே பாடலை வைத்து ‘The Fighter’ என்று குறிப்பிட்டதோடு Strong Lady, salute போன்ற எமோஜிக்களை போட்டுள்ளார். ரஷிதாவின் இந்த பதிவு தினேஷ் ரசிகர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ரக்ஷிதாவின் இந்த பதிவை பார்த்த பலர் ஏன் இவ்வளவு வன்மம் என்று கூறி வருகின்றனர்.

ரஷிதா பிக் பாஸில் இருந்த போது அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார் தினேஷ். மேலும், ரஷிதாவை பலர் troll செய்த போது கூட அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ராபர்ட் விஷயத்தில் கூட ரசிதாவின் பெயர் டேமேஜ் ஆன போதும் தன் மனைவி அப்படிப்பட்டவள் இல்லை என்று கூறினார். அவ்வளவு ஏன் ரஷிதா பிக் பாஸுக்கு செல்லும் முன் ரஷிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஆனால், ரஷிதா அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

-விளம்பரம்-

தற்போதும் கூட family Roundல் தன்னை பார்க்க ரஷிதா வருவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார் தினேஷ். ஆனால், தினேஷ் பிக் பாஸ் சென்ற நாள் முதல் ரஷிதா ஒரு வார்த்தை கூட அவரை பற்றி பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் ரஷிதா, தினேஷை டேமேஜ் செய்யும் விதமாக விசித்ராவிற்கு ஆதரவாக பதிவிட்டு இருப்பதை கண்ட ரசிகர்கள் பலர், இது மிகவும் சீப்பாக இருக்கிறது. தினேஷுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ரஷிதா பெயரை வைத்து தினேஷை ஏதாவது பண்ணனும் என்று பேசி இருந்தனர். இதனால் கடுப்பான ரஷிதா ” என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. உங்கள் விளையாட்டிற்காக என்னை இழுப்பது கேவலமாக இருக்கிறது. இதனை பிக் பாஸ் குழுவும் எச்சரிக்க வேண்டும். நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்கள் தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement