என்னது சிறு நீர் வேண்டுமா ? – தமிழை கொன்ற போட்டியாளர், வச்சி செய்யும் ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

0
340
rachitha
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 தொடங்கி ஒரு மாதம் கழிந்த நிலையில் போட்டியாளரான ரட்சிதா கேட்ட கேள்வியால் போட்டியாளர்கள் திகைத்து நின்ற வீடியோ காட்சி தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை மேலும் மகிழ்விக்க பிக் பாஸ் வீட்டின் தோற்றம் முழுவதுமாக மாற்றப்பட்டது. அதாவது பிக் பாஸ் வீடு முழுவதும் அரண்மனை போல மாற்றப்பட்டு அரசர்கள் ஆட்சிபுரியும் இடம் போன்று உருவாக்கப்பட்டு பார்க்கவே அருமையாக இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இதனை மேலும் விறுவிறுப்பாக்க போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க்கானது வழங்கப்பட்டு அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சித்தா, இளவரசராக மணிகண்டனும், ஜனனி இளவரசியாகவும், விக்ரமன் ராஜகுருவாகவும், ஏடிகே அருங்கட்சியாக தலைவராகவும், ராம் கண்தெரியாதவராகவும், தனலட்சிமி கதை அளக்கும் அளக்கவும், ஆயிஷா உறங்கும் நபராகவும், பாதுகாவலராக கதிர், நிவாஷினி, குயின்ஸி, ஷிவின்,அமுதவாணன் இருந்தனர்.

- Advertisement -

ரட்சிதா கேட்ட கேள்வி :

மேலும் மைனா காது கேளாதவராக என்று ஒவொருவருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது.இந்த ராஜவம்சம் டாஸ்கில் ஏற்கனனே ராஜகுருவாக விக்ரமனுக்கும் படைத்தபதியான அசீமிற்கும் மிகப்பெரிய சண்டை வந்தது ஒரு பக்கம் இருக்க சில குயிட் காட்சிகளையும் நம்மால் பார்க்கத்தான் முடிகிறது. அதிலும் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும் ரட்சிதா ராணியாகவும் இருந்தனர்.

கலாய்க்கும் ரசிகர்கள் :

இந்த நிலையில் ரட்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் உங்களுக்கு என்ன வேண்டும் ராணியே என்று கேட்க ‘ரட்சிதா தனக்கு சிறுநீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ராம் நைசாக நழுவி விட்டார்.இப்படி ரட்சிதா சொல்லிய பிறகு மற்ற போட்டியாளர்களுடன் ராஜாவும் ராணியும் பேசிக்கொண்டிருக்கும் போது ராணி ரட்சிதா நான் சிறுநீர் வேண்டும் என்று அப்போதே கேட்டேன் ஏன் இன்னமும் வரவில்லை என்று கூற ராஜாவான ராபர்ட் மாஸ்டர் செய்வதறியாது திகைத்து அங்கிருந்து விளக்கினார்.

-விளம்பரம்-

இந்த விடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்த நெட்டிசன்கள்’தூய தமிழ் என்று தமிழை கொள்ள வேண்டாம் ‘ என்று மீம்ஸ்களை போட்டு கேலியும் கிண்டலும் செய்து வைரலாக்கி வருகின்றனர். இதற்க்கு பதிலளிக்கும் வகையில் சில நெட்டிசன்கள் பண்டைய மொழியில் சிறுநீர் என்பது அப்போது சிறிதளவு நீர் என்பதை குறிக்கும் என்றும், சிறுவாணியில் இருந்து வரும் நீரை கூட சிறுநீர் என்றுதான் அழைப்பாரக்ள் என்று விளக்கமளித்தனர்.

முட்டு கொடுக்கும் ரஷிதா ரசிகர்கள் :

மேலும், ராஜவம்சம் டாஸ்கிங் போது ராணியான ரட்சிதா சரியாகத்தான் தமிழ் மொழியில் தனக்கு சிறிதளவு நீர் வேண்டும் என்பதைத்தான் சிறுநீர் என்று கூறியிருக்கிறார். அந்த டாஸ்கில் ராணியின் கதாபாத்திரத்தில் ரட்சிதான் கூறியது சரிதான் என்று சில நெட்டிசன்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

Advertisement