புகைப்படத்தை பதிவிட்ட ரைசா. போன் நம்பரை கேட்டு தொல்லை செய்யும் ரசிகர்கள்.
பிக் பாஸ் ரைசா தற்போது பல படங்களில் நடித்து கொண்டு பிசியாக உள்ளாராம். மேலும்,சமீபத்தில் இவர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படமும்,கருத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பெங்களூரில் பிறந்தவர். ரைசா வில்சன் தனது பள்ளிப் படிப்பை நாசரேத் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் ஊட்டி நகரில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேசப் பள்ளியிலும் படித்தார். ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
https://twitter.com/raizawilson/status/1198262733466042368
அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். மேலும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். இதனை தொடர்ந்து ரைசா அவர்கள் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடித்துள்ளார் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : இந்த பிரபல நடிகர், எஸ் பி பிக்கு இப்படி ஒரு சொந்தமா. இது தெரியுமா உங்களுக்கு ?
அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் நேரடியாக போட்டியாளராக கலந்து கொண்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து "பியார் பிரேமா காதல்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதோடு இசையை அடுத்து யுவன் சங்கர் ராஜா அவர்கள் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து உள்ளார். மேலும், இந்த படம் பெரிய அளவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெற்றது.
https://twitter.com/Vjmraghavan/status/1198263643978158081
https://twitter.com/StarInvisible/status/1198268667768844288
https://twitter.com/Santhosh_GvP/status/1198262881260752896
இதனை தொடர்ந்து ரைசா வில்சன் அவர்கள் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரைசா வில்சன் அவர்கள் அலைஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'காதலிக்க யாருமில்லை' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை ரைசா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை மணி மணி சந்ரு என்பவர் இயக்கி வருகிறார். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை ரைசா அவர்கள் பதிவிட்டு உள்ளார். மேலும், அதில் ரைசா அவர்கள் பதிவிட்டது, "Call me on my landline" என்று போட்டு அவருடைய புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார். அதோடு இப்ப ட்ரெண்டிங்கில் இந்த நியூஸ் தான் பயங்கரமாக உள்ளது. மேலும்,ரசிகர்கள் இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை கண்ட ட்விட்டர் வாசிகள் ரைசாவின் செல் போன் நம்பரை கேட்டு தொல்லை செய்து வருகின்றனர்.