இந்த பிரபல நடிகர், எஸ் பி பிக்கு இப்படி ஒரு சொந்தமா. இது தெரியுமா உங்களுக்கு ?

0
6284
spb
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுபலேகா சுதாகர். இவர் பிரபல இயக்குனர் கே. விஸ்வநாத் இயக்கிய ”சுபலேகா” என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆன கலைஞர் தான் சுதாகர். இவர் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான சுதாகர். சுபலேகா என்ற தெலுங்கு திரைப் படத்தின் மூலம் தான் சுதாகர் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படம் ஆந்திராவில் 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் படம் என்ற படத்தை அளித்தது என்றும் சொல்லலாம். மேலும்,இந்த படத்தின் மூலம் தான் இவரை “சுபலேகா சுதாகர்” என்று அழைக்க தொடங்கினார்கள். மேலும், இந்த படத்தை ஹிந்தியில் “சுப காம்னா” என்ற பெயரில் வெளியிட்டார்கள். இதிலும் கதாநாயகன் சுதாகர். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சுதாகரை பார்த்தால் அனைவரும் என்ன சொல்வார்கள் என்றால், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தமிழ் நடிகர் சுரேஷ், இந்தி நடிகர் குமார் கௌரவ் ஆகிய மூவரையும் ஒன்று சேர்த்தால் போல் இருக்கும் என்றும் கூறுவார்கள்.

-விளம்பரம்-
Image result for subhalekha sudhakar spb"

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நடிகர் சுதாகர் அவர்கள் ‘சவால், ரெண்டு ஜடை சீதா, ஜீவன சதரங்கம், கொத்த தம்பத்லு (தாம்பத்தியம் ஒரு சங்கீதம்), பைரவி கோனா’ என பல தெலுங்குப் படங்களில் நடித்து உள்ளார். மேலும், தமிழில் துணை, குருதிப்புனல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். பின் நேசம், ரட்சகன், அயன் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும்,நடிகர் சுதாகர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் பேசுவார். மேலும், சுபலேகா சுதாகர் அவர்கள் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் வெள்ளித் திரையில் இருந்து சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். மேலும்,இவர் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தொடர்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காற்றின் மொழி சீரியல் நடிகை.

தமிழில் பிரியமானவள், கோலங்கள், ராஜ ராஜேஸ்வரி, இளவரசி, சித்தி, தென்றல், பவானி போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். இவருடைய மனைவி எஸ். பி. சைலஜா. அதாவது எஸ்.பி.பி. யின் தங்கை ஆவார். இவர்களுக்கு ஸ்ரீதர் சுதாகர் என்ற ஒரு மகனும் உள்ளார். சினிமா உலகில் எஸ்.பி.பியை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா?? மேலும், இவருடைய முழு பெயர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் தென்னிந்திய சினிமா உலகில் இவர் பாடாத பாடல்களே இல்லை. தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு கூட எஸ்.பி.பி. பாடல் என்றால் உயிர். அந்த அளவிற்கு இவருடைய பாடல்கள் வேற லெவல்ல இருக்கும். மேலும், இவரை இசையின் வித்துவான் என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for subhalekha sudhakar spb"

மேலும், இவர் பத்மபூஷன்,தேசிய விருது என பல விருதுகளையும் வாங்கியுள்ளார். மேலும்,இவர் திரைப்பட பாடகர் மட்டுமில்லாமல் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முகங்களை கொண்டவர். இவர் 1966 இல் தொடங்கி இன்று வரை பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் தென்னிந்திய மொழிகளில் பாடி உள்ளார். மேலும், உலக அளவில் அதிக அளவு பாடல்களை பாடியதற்காக இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து சுதாகர் அவர்கள் எஸ்.பி.பி. தங்கையை திருமணம் செய்து கொண்ட பின் எஸ்.பி.பி.யும் சுதாகரும் மாமன்– மச்சான் என்ற உறவு இவர்களுக்கிடையில் தொடங்கியது.

Advertisement