நெருங்கிய நபருக்கு உடனடியாக AB + குரூப் ரத்தம் தேவை.! அவசர தகவலை பகிர்ந்த நடிகை ரைசா.!

0
282
Raiza

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வி ஐ பி- 2’ படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார். 

- Advertisement -

சமீபத்தில் இவரும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை ரைசா தனது நெருங்கிய நண்பருக்கு அவசரமாக AB + குரூப் ரத்தம் தேவை என்ற அவசர தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள்.

Advertisement