தவறான பேசியலால் முகம் வீங்கிப்போனதை தொடர்ந்து நடிகை ரைஸா வில்சன் நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்துக்கொள்ள அடிக்கடி பியூட்டி பார்லருக்கு பல ஆயிரம் செலவு செய்து வருவது தான் நடிகைகளின் வாடிக்கை. இப்படி ஒரு நிலையில் பியூட்டி பார்லர் சென்று பேஷியல் பண்ணதால் தற்போது ரைசாவின் முகம் அலங்கோலமாக மாறி இருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பகிர்ந்து புலம்பி தள்ளி இருந்தார் ரைசா.

சமீபத்தில் ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது.

இதையும் பாருங்க : எனக்கு நம்பிக்க கிடையாது, நாம என்னைக்கும் உதாரணமா இருக்கனும் – விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்.

Advertisement

இதை தொடர்ந்து நான் அவரிடம் பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பரிதாபத்துடன் பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சம்மந்தப்பட்ட தோல் மருத்துவமனையின் மருத்துவர் பைரவி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இருபக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது.

இதே, சிகிச்சையை ஏற்கனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது அதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பைரவி.இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் சிலர் சீமான், விளம்பரங்கள் குறித்தும் கார்ப்ரேட் குறித்தும் பேசிய வீடியோவை ரைசாவின் பிரச்சனையோடு ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டு ‘அன்றே சொன்ன சீமான்’ என்று தலைப்புகளை கொடுத்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு டாக்டர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் ரைசா வில்சன். ரைசா வில்சன் செய்து கொண்ட சிகிச்சைக்கு ரூ. 1.27 லட்சம் செலவு செய்தாராம். செலவு செய்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டு, முகம் வீங்கியது தான் மிச்சம் என்று கூறியுள்ள ரைசா, 15 நாட்களில் ரூ. 1 கோடி தராவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தனது வழக்கறிஞர்மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரைசா.

Advertisement

Advertisement