ஏன் இப்படி எலும்பா ஆகீடீங்க – ரைசாவின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
3300
raiza
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரைசா வில்சன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் நடிகையாக ரைசா வில்சன் அறிமுகமான முதல் படமாம். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகை ரைசா வில்சனும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Happy Throwback ?. @vicky5d ??

A post shared by Raiza Wilson (@raizawilson) on

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ரைசா வில்சனிற்கு அடித்தது லக். ஆம்.. ஹீரோயினாக நடிக்க ரைசா வில்சனிற்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது. அந்த படம் தான் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு throwback புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படத்தில் படு ஸ்லிம்மாக இருப்பதை கண்டு பலரும் வாயடைத்து போயுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement