விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : அங்க சுத்தி இங்க சுத்தி பூசாரியிடம் வலிமை அப்டேட் பற்றி குறி கேட்ட தல ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

Advertisement

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். சமீபத்தில் கூட பேஷியல் சென்ற இடத்தில் விபரீதம் ஏற்பட்டு ரைசாவின் முகம் அலங்கோலமானது. இது குறித்து பைரவி செந்தில் மீது ரைசா மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதே போல பதிலுக்கு பைரவி செந்திலும் ரைசாவிடம் நஷ்டயீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியை விட சிறந்தது என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர், இங்க அவன் அவனுக்கு என்ன பிரச்சனை போது Chicken பிரியாணி பத்தி பேசிட்டு இருக்க என்று கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் இவர், 5 குழந்தைகளுக்கு மேல் இருப்பர்வர்களை கேட்கிறேன். அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதற்க்கு ரசிகர்கள் பலர் குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ரைசாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement
Advertisement