அங்க சுத்தி இங்க சுத்தி பூசாரியிடம் வலிமை அப்டேட் பற்றி குறி கேட்ட தல ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

0
747
valimai
- Advertisement -

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் பூசாரியிடமே வலிமை அப்டேட் குறித்து குறி கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை.

-விளம்பரம்-

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் ‘வலிமை’ அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : ஹிப் ஹாப் ஆதியின் பாடலை வச்சி செய்த நெட்டிசன்கள் – அது புரியாமல் அவர் போட்ட பெருமையான பதிவு. சும்மா இருப்பாங்களா பசங்க.

- Advertisement -

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் காட்சி உள்ளது. இனி மனிதர்களிடம் கேட்டு பயனில்லை என அஜித் ரசிகர்கள் சாமியிடமே ‘வலிமை’ அப்டேட்டை கேட்க தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement