Pink Dress போட்டா Barbieஆ – பிக் பாஸ் ரைசாவின் பதிவை கலாய்கும் நெட்டிசன்கள்.

0
1420
- Advertisement -

பிங்க் உடையில் ரைசா வில்சன் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கேலி செய்து வரும் மீம்ஸ் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது . விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் பெங்களூரை சார்ந்தவர். இவர் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதற்கு பின் ரைசா அவர்கள் அழகி மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு படம் பெற்றார். அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ரைசா வில்சன் திரைப்பயணம்:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை இலன் எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. காதல் நகைச்சுவையை மையமாகக் கொண்ட படம். அதன் பின்னர் இவர் வேறு சில படத்தில் நடித்தார். ஆனால், நாயகியாக நடிக்கவில்லை.

ரைசா வில்சன் நடித்த படங்கள்:

இதனை எடுத்து இவர் தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் பியார் பிரேமா காதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் காபி வித் காதல். இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஜீவா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை குஷ்பூ தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

ரைசா பதிவிட்ட புகைப்படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரைசா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அதாவது, ரைசா அவர்கள் பிங்க் நிற ஆடையில் செல்பி எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பார்பி என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே, பிங்க் டிரஸ் போட்டா நீ பார்பியா? சன்னி லியோன் மாதிரி இருக்க. ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாம இப்படி எல்லாம் பண்றதா என்றெல்லாம் கிண்டல் செய்து விமர்சித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement