பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா வில்சன்.
https://www.instagram.com/p/B1G3PvRn6pp/?igshid=op3rvdmf4p4s
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தன்னை பற்றிய அப்டேட்களை அடிக்கடி பதிவிடுவார் அந்த வகையில், சன்யாசி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில் ஹெலோ ரைசாநந்தா என்று கமன்ட் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நித்யாநந்தா சீடராக மாறிவிடீர்களா என்று கிண்டலாக கமன்ட் செய்து வருகின்றனர்.





