என்ன டார்லிங் இப்படி ஜ**யோடு சுத்திட்டு இருக்க ? கேலி செய்த ரசிகருக்கு ரைசா பதிலடி.

By Rajkumar · 3/3/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

https://www.youtube.com/watch?v=WJlcbj2htvg

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார்.இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : 18 ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்த கோலங்கள் புகழ் அபி சரவணன் ஜோடி- இம்முறை சன் டிவில இல்ல.

அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல ரசிகர் பட்டாளங்கள் குவிந்தது. பிக் பாஸுக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து "பியார் பிரேமா காதல்" படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்ள ரைசா, அங்கே நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர், என்ன டார்லிங் ஜட்டியோட சுத்திட்டு இருக்கீங்க என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ரைசா, உங்கள பொறுத்த வர நீச்சல் குளத்துல ப்ளேசர் மற்றும் பேண்ட் போடனும். தயவு செய்து ஸ்டைலிஸ்டாக மாறாதீங்க என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full