சொந்த தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் டாக்டர் மனைவி விருப்ப மனு தாக்கல் – எந்த கட்சியில் தெரியுமா ? (கொரோனா நேரத்துல இவர் என்னெல்லாம் செஞ்சார் தெரியுமா)

0
2585
vimal
- Advertisement -

நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் 2021கான சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்ரில் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வருகிற 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் பல்வேறு சக்திகளிடம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது விருப்பமானவை நடித்து வரும் நிலையில் நடிகர் விமலின் மனைவியும் தேர்தலில் போட்டியிட விருப்பமனுவை அளித்துள்ளார். தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அதேபோல கொரோனா காலத்தில் கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் அனுமதியில்லாமல் விமல் மற்றும் சூரி ஏரியில் மீன் பிடித்ததாக கூறி புகார் எழுந்தது.

- Advertisement -

இதையடுத்து சூரிய மற்றும் விமல் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கூட விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி விமலுக்கு சமீப காலமாக போறாத காலமாக இருக்க நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயாவும் வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர்.  அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் விமல், கொரோனா ஊரடங்கின் போது, தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் களம் இறங்கி வீதியில் கிருமிநாசினி தெளித்தார்.இதுகுறித்து பேசிய போது தனது மனைவி குறித்து பேசிய அவர், என்னுடைய மனைவி டாக்டர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள் இப்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போன வாரம் வரை வேலையில்தான் இருந்தார்கள் இந்த நேரத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் செய்ததை பார்ப்பதை கண்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement