கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் சோகத்தையும் சோதனையையும் எதிர்கொண்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்த வைரஸ் உறவானது முதன் முதலில் சீனாவில் தான் என்பதால் சீனா மீது பலரும் கோபத்தில் இருந்து வருகின்றார்கள். அவ்வளவு ஏன் அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் கூட கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டு இருந்தது சீன அரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் சீனா குறித்து பிரபல நடிகை ரைசா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர்.

Advertisement

ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.தற்போது தமிழில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா சமீபத்தில் சீனா குறித்தும் கொரோனா குறித்தும் சில ட்வீட்களை செய்திருந்தார்.

அதில், உண்மையாக கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டால் நான் அங்கே தனிப்பட்ட முறையில் சென்று உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன். யாரெல்லாம் என்னுடன் வருகிறீர்கள் ? எனக்கு என்னுடைய வேலைகளை துவங்க வேண்டும் அதேசமயம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Advertisement

இந்த குரோனா என்ன ? இது வேண்டுமென்றே பரப்பப்பட்டதா ? தனக்கு எல்லாம் தெரியும் என்ற நபர் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா ? இதன் மூலம் நாம் பாடத்தை கற்றுக் கொண்டோமா ? இன்னும் எத்தனை நாட்கள் இதை நாம் அனுபவிக்க வேண்டும் ? என்று பதிவிட்டுள்ளார்

Advertisement

வட டெல்லி மாநகராட்சியின் கீழ் உள்ள மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள்வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரைசா, மருத்துவர்களுக்கு 3 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லையா? இது உண்மை தானா ? பிரதமர் நிதியை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது. நான் செலுத்திய வரிப்பணம் எல்லாம் என்ன ஆனது என்று கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement