நயன்தாரா, திரிஷா கூட இவ்ளோ சீன் போட மாட்டாங்க.! ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

0
13508
raiza
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா.

-விளம்பரம்-
View this post on Instagram

??‍♂️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா. தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ‘காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ரைசா ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவருக்கு பாதுகாவலராக 5 பௌன்சர்கள் நடந்து செல்கின்றனர். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நயன்தாரா, திரிஷாக்கு கூட இவ்ளோ சீன் போபட மாட்டாங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.!

-விளம்பரம்-
Advertisement