கவின் படம் டூ காமெடி ராஜா. முதல் கல்யாண நாளை கூட கொண்டாடாமல் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள ராஜு.

By Rajkumar · 5/10/2021

ஒட்டுமொத்த மக்களும் பல மாதங்களாக ஆவலுடன் எதிர் நோக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் நாளன்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. வழக்கம்போல் வீடு ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கி இனிதே முடிவடைந்தது. அதிலும் குறிப்பாக ராஜு ஜெயமோகன் மற்ற போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார் என்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

இவர் மற்ற போட்டியாளர்களான ஐக்கி பெர்ரியை ஜமீன் கோட்டை படத்தில் வரும் பேய் போல் உள்ளார் என்று கூறியிருந்தார். அதேபோல் தாமரை செல்வியிடம் பேய் கதை சொல்லி அவரை பயமுறுத்தி சிரிக்க வைத்தார். அக்ஷரா ரெட்டியை நீங்கள் அமலா போல் உள்ளீர்கள் என்று கூறி கலாய்த்து இருந்தார். இப்படி முதல் நாளன்று ராஜீ அவர்களின் காமெடி ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் ராஜி பற்றி பலரும் தெரியாத சில விஷயங்களை இங்கு பார்க்கலாம். ராஜு விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : உங்க விவகாரத்து எப்போ - ஹனிமூனின் போது நீச்சல் உடை புகைப்படத்தை பதிவிட்ட வித்யு லேகாவிற்கு வந்த கமெண்ட்ஸ். அவர் கொடுத்த பதிலடி.

நடிகர் ராஜூ ஜெயமோகன் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார்.இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் ரோலில் நடித்த கவினுக்கு நண்பராக நடித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=vniUCQKAX5o

இதனை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர்,பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றினார். அதற்கு பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார்.

மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரை பதித்த பின்பு தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின் இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும், இவர்களின் படிக்கும் பருவத்தில் இவர்களுக்கு தோன்றிய காதல், திருமணம், செல்ல சண்டைகள் என அனைத்தையும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஜு இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full