கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல நடிகையான வித்யூ லேகாவும் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்தார் வித்யூ லேகா. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. அதன் பின்னர் பல்வேரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் குண்டாக இருந்த போது பல்வேறு உருவக் கேலிகளுக்கு உள்ளானர்.இப்படி ஒரு நிலையில் தனது உடல் எடையை குறைத்து கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தார். கடந்த இருபத்தி ஆறாம் தேதி தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தன் கணவருடன் மால்தீவ்ஸ்க்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை கண்டு சிலரோ, இது போன்று ஆடை போட்டால் விவாகரத்து தான் என்று கமன்ட் செய்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடுவிரலை காட்டும் ஒரு டி – ஷர்ட் ஒன்றை அணிந்த படி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட வித்யு லேகா, 1920 களில் இருக்கும் அங்கள் ஆண்டீஸ் 2021 க்கு வாருங்கள்.இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது. ஒரு பெண் அணியும் ஆடைகள் தான் விவாகரத்து ஏற்படும் என்றால் ஒழுங்காக ஆடை அணிந்து கொண்டு இருக்கும் அனைவருமே சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கிறார்களா.
நல்லபடியாக எனக்கு பாதுகாப்பான ஒரு கணவர் கிடைத்திருக்கிறார். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்று தான் சொன்னார். ஆனால், என்னால் இதையெல்லாம் கடந்து செல்ல முடியாது. உங்களின் குறுகலான, விஷமத் தன்மையுடைய புத்தியை என்னால் மாற்ற முடியாது. உங்களுக்கு வரப்போகும் பெண் உங்களின் மட்டமான புத்தியை மாற்றுவார் என்று நம்புகிறேன் வாழு வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.