தன் இரண்டு குரு நாதர்களை நேரில் சந்தித்து பிக் பாஸ் கோப்பையை காட்டியுள்ள ராஜு – அவரே பதிவிட்ட புகைப்படம்.

0
729
Raju
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். பின் பல போராட்டங்களுக்கு பிறகு ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், ராஜு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி வந்தார்.

- Advertisement -

குருநாதர்களை சந்தித்துள்ள ராஜு :

இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜுவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் பட்டத்தை வென்ற ராஜு தனது பிக் பாஸ் கோப்பையை தன்னுடைய குருநாதரான பாக்கியராஜ் மற்றும் நெல்சனிடன் கொடுத்து வாழ்த்தை பெற்று இருக்கிறார்.

வீடியோவில் 20 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ராஜு. மேலும், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ராஜு ‘என்னுடைய குரு பாக்கியராஜ் சாரிடம் பேசும்போது தம்பி நீ வெற்றி பெற்று எனக்கு பெருமை தேடித் தந்து இருக்கிறாய் என்று சொன்னார் அவருக்கு என்ன நான் பெருமையை தேடித் தருவது அவருடன் என்பதுதான் எனக்குப் பெருமை ஆனால் அவரே இப்படி என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக தான் இருந்தது.

நெல்சன் கேட்டுள்ள கேள்வி :

அதேபோல நெல்சன் அண்ணனிடமும் போய் அவார்டை காட்டினேன் அதற்கு அவர் காசி எங்கப்பா என்று கேட்டார் இவர்கள் இரண்டு பேருமே பெரிதாக பாராட்ட மாட்டார்கள் ஆனால் அவர்களிடமிருந்து பாராட்டை கேட்டது பெரிய விஷயம் தான் என்று கோரியிருக்கிறார் ராஜு. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய ராஜு, நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து கூறி இருந்தார்.

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சந்திப்பு :

அதில், பொதுவாகவே விஜய் தளபதி அவர்கள் செட்டில் யார் புதிதாக? இருந்தாலும் கண்டுபிடித்தவர். அப்படித்தான் அவர் என்னை பார்த்துவிட்டு இங்கே வா, புதுசா, யார் நீ? என்று கேட்டார். உடனே நான் நெல்சன் டீமில் இருக்கிறேன் என்று சொன்னவுடன் அப்படியே என்ன பண்ணுகிறாய். உன் கண்ணு ரொம்ப பயங்கரமாக இருக்கு என ரொம்ப கேஷுவலாக பேசினார். தளபதி பார்க்கும் போது நான் அவரைப் பற்றி சின்ன வயதிலிருந்து சேர்த்து வைத்த ஸ்டிக்கர் நோட்டை அவரிடம் காட்டினேன். அவர் ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து நைஸ் என்று என்னை பாராட்டி பிரியமுடன் விஜய் என்று ஆட்டோகிராஃப் போட்டுத் தந்தார் என்றும் கூறி இருந்தார் ராஜு.

Advertisement