அசல் இல்லாத குறையை தீர்க்க துவங்கிய Ram – விமர்சனத்திற்கு உள்ளான அவரின் வீடியோ இதோ.

0
493
asal
- Advertisement -

அசலைத் தொடர்ந்து பெண்களிடம் எல்லை மீறும் போட்டியாளர் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் முடிந்து நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதோடு இந்த முறை நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார். அசல் எலிமினேட் ஆனதற்கு காரணமே அவர் வீட்டில் உள்ள பல பெண்களிடம் அத்துமீறி தொடுவது, தடவுதல் போன்ற பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்திருந்தார்.

வெளியேறிய அசல் :

இதனால் ரசிகர்கள் கடுப்பாகி அசலை வெளியே ஏற்றுங்கள் என்றெல்லாம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதனால் தான் அசல் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருந்தார். ஆனால், அசல் வெளியேறியதற்கு நிவாஷினி கதறி கதறி அழுதிருந்தார். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் அசல் செய்த வேலையை பிக் பாஸ் வீட்டில் இன்னொரு போட்டியாளர் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அடுத்த அசலா ராம் :

அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம ராம் ராமசாமி தான். ராம் ஒரு மாடல் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இவர் பெண்களிடம் ஸ்வீட் ஆகவும், அமைதியாகவும் டீல் செய்து கொண்டு வருகிறார். அதிலும் மகேஸ்வரி விஷயத்தில் இவர் ரொம்ப அமைதி காத்து வருகிறார். தற்போது இவர் ஜனனியிடம் எல்லை மீறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement