விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. Ticket To Finale டாஸ்க் என்றால் பெரும்பாலும் பிஸிக்கல் டாஸ்க்காக தான் இருக்கும். ஆனால், இந்த சீசனில் பெரும்பாலும் விவாதம் அடிப்படையில் தான் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. ஆனால், நேற்று துவங்கிய இறுதி மற்றும் எட்டாம் டாஸ்க் தான் கொஞ்சம் கடுமையாக இருந்து வருகிறது. இதுவரை 7 டாஸ்க்குகள் முடிவடைந்தது.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் இடம்பற்ற Money Heist Professor – ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய Netflix நிறுவனத்தின் ட்வீட்.

Advertisement

இந்த ஏழு டாஸ்கின் முடிவின்படி சோம் சேகர் தலா 39 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருந்தனர். இருக்கு அடுத்தபடியாக ரியோ 37 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார், அவரை தொடர்ந்து 32 புள்ளிகளுடன் ஷிவானி மூன்றாம் இடத்திலும் இருந்தனர். நேற்றய கடைசி டாஸ்க் முடிவில் ஷிவானி மற்றும் ரம்யா மட்டும் கடைசி வரை கயிறை விடாமல் பிடித்து வந்தனர்.

அவர்களின் மன வலிமையை உற்சாகப்படுத்தும் விதமாக பிகில் படத்தில் வந்த சிங்கப்பெண்ணே பாடலை போட்டு உற்சாகப்படுத்தினர். இப்படி ஒரு கஷ்டமான போட்டியில் 4 ஆண்கள் இருந்தும் இறுதியில் இரண்டு பெண்கள் மனவலிமையுடன் போராடி வருவதை பார்த்து பலரும் பாராட்டினர். அந்த வகையில் ரம்யா பாண்டியனின் சகோதரர், கப்பு வேணாம் டைட்டில் வேணாம் இது போதும், ஹேட்டர்ஸ், இதெல்லாம் நீங்க நெனச்சிகூட பாக்கமுடியாது, நீ ஏற்கனேவே ஜெயிச்சிட்ட மாறா என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement