மாஸ்டர் படத்தில் இடம்பற்ற Money Heist Professor – ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய Netflix நிறுவனத்தின் ட்வீட்.

0
895

இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக வேண்டியது, ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிக்கொண்டு போனது. இப்படி ஒரு நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தினமும் இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி வருகிறது. தினம் ஒரு ப்ரோமோ வெளியாவதோடு தினமும் மாஸ்டர் படத்தில் எக்ஸ்குலுசீவ் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் பட புகைப்படம் ஒன்றில் Money Heist புகழ் ப்ரொபஸரின் ரெபரென்ஸ் பற்றி Netflix நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘Money Heist ‘ தொடர் உலகளவில் பிரபலமானது. அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? அந்த கொள்ளை கும்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இதன் கதை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் புகைப்படம் ஒன்றில் நடிகர் விஜய் பயன்படுத்தும் லாப் டாப் ஒன்றில் மணி ஹேய்ஸ்ட் சீரியஸ் ப்ரொபஸரின் ஸ்டிக்கர் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள Netflix தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், வாத்தி எங்களுடைய வாத்தியை பிடித்திருப்பது மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.

ஏற்கனவே, இந்த வெப் சீரிஸின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் இந்தியன் வெர்ஷனில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விக்கு “ப்ரொஃபஸர் கேரக்டர் – விஜய், பெர்லின் கேரக்டர் – ஷாருக்கான், பொகோட்டா கேரக்டர் – அஜித், சுவாரஸ் கேரக்டர் – சூர்யா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement