விட்றா வண்டிய EVPக்கு - தனது அக்கா வாங்கிய புதிய காருக்கு ரஜினி ஸ்டைலில் வாழ்த்து சொன்ன அவரின் தம்பி.

By ·

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக "ஆண்தேவதை" என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இதையும் பாருங்க : படத்துல தான் திருமணம் பண்ணல, ஆனால் நிஜத்துல பன்னிட்டாங்க - கர்ணன் பட அக்கா நடிகையின் கணவர் யார் தெரியுமா ?

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு சமூக வலைதளத்தில் அந்த அளவிற்கு ஹேட்டர்ஸ் என்பது இல்லாமல் தான் இருந்தது.

இப்படி ஒரு நிலையில் நநடிகை ரம்யா பாண்டியன் புதிய Bmw சுகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் விலை 55 லட்சமாம். ரம்யா பாண்டியன் வாங்கிய புதிய காருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனது அக்கா கார் வாங்கியதற்கு ரஜினி ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ள ரம்யாவின் தம்பி, ’அக்கா உன்னுடைய முதல் பிஎம்டபிள்யூ கார் வாழ்த்துக்கள். அப்படியே காரை எடுத்து கொண்டு 555 சிகரெட் ரெண்டு லூசில் வாங்கிக்கோ, நான் ராபின்சன்னுக்கு கால் செய்றேன், விட்றா வண்டியை ஈவிபிக்கு’ என்று பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலில் கார் வாங்கிய நிகழ்வை நிகழ்ச்சி ஒன்றில் கூறியது போல் பரசுராம் வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011ல் 21ஜி பஸ்ஸில் சென்றாய், 2021ல் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளாய். நல்லவனுக்கு நல்லதே நடக்கும்’ என்று பதிவு செய்துள்ளார். பிக் பாஸ் மூலம் ரம்யா பாண்டியன் 70 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார் என்றும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full