‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகையும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படத்தில் இவரை பார்த்ததும் ‘இவர எங்கியோ பாத்த மாதிரி இருக்கே’ என்று பலரும் எண்ணம் எழுந்து இருக்கும்.
இதையும் பாருங்க : கர்ணன் திரௌபதையா இது – தொடை தெரியும் உடையில் கொடுத்த கிளாமர் போஸை பாருங்க.
இவர் வேறு யாரும் இல்லை தமிழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘லட்சுமி’ குறும்படத்தில் நடித்தவர் தான். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இந்த குறும்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனால், அணைத்து எதிர்ப்பையும் மீறி இந்த குறும்படம் மிகவும் வைரலானது.
கர்ணன் படத்தில் இவர் கர்ணன் வேலைக்கு போனால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீம்பாக இருப்பார். அவர் திருமணம் செய்துகொண்ட நபர் வேறு யாரும் இல்லை விவிஎஸ் லக்ஷ்மன் 281, டோன்ட் டெல் தே கவர்னர் போன்ற புத்தகங்களை எழுதிய பிரபல எழுத்தாளர் வெங்கட்ராகவன் சீனிவாசன் என்பவர் தான் லட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார்.