சூர்யா படத்தில் கமிட் ஆன ரம்யா பாண்டியன் - அவரே வெளியிட்ட மாஸ் தகவல். ஆனால், ஒரு வருத்தம்.

By Rajkumar · 27/1/2021

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

https://twitter.com/iamramyapandian/status/1354333958561878018

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக "ஆண்தேவதை" என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இதையும் பாருங்க : தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு முகேன் உருக்கம்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு சமூக வலைதளத்தில் அந்த அளவிற்கு ஹேட்டர்ஸ் என்பது இல்லாமல் தான் இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.

https://twitter.com/rajsekarpandian/status/1354338789297020929

இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். தற்போது ரம்யா பாண்டியனுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது. சூர்யா தயாரிப்பில் நடித்தாலும் சூர்யாயுடன் நடிக்கவில்லை என்பது ரம்யாவின் ரசிகர்ளுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full