தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு முகேன் உருக்கம்.

0
1183
mugen
- Advertisement -

தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் முகேன் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசனை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது மூன்றாம் சீசன் தான். அதிலும் இந்த சீசனில் ‘வி ஆர் தி பாய்ஸ்’ குழுவில் இருந்த அனைவரும் ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்கள் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

-விளம்பரம்-

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது.

இதையும் பாருங்க : சட்டை பட்டனை துறந்த படு கிளாமர் கோலத்தில் ராஜா ராணி பட நடிகை – வாயடைத்து போன ரசிகர்கள்.

- Advertisement -

இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் முகென் ராவ்வின் தந்தையான பிரகாஷ் ராவ் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமாகி இருந்தார். முகென் ராவின் தந்தை காலமானதையொட்டி அவரது நண்பர்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் வருத்தத்தையும், ஆறுதலையும் கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இன்று (ஜனவரி 27, புதன் கிழமை) முகேன் ராவ் தந்தையின் முதல் ஆண்டு நினைவு நாளை அவரது குடும்பத்தினர் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முகேன், என்னுடைய வளர்ச்சியை என்னுடன் இருந்து பார்க்க நீங்கள் இல்லை என்பது வருத்தம். உங்களின் ஆசிர்வாதம் என்னுடன் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களை பெருமையடைய செய்வேன். அது மட்டும் சத்தியம். மிஸ் யூ அப்பா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement