சிறு வயதிலேயே தனது அக்காவுடன் சிறுவர் மலர் அட்டை படத்தில் இடம்பெற்றுள்ள பிக் பாஸ் நடிகை.

0
766
ramyapandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு கொண்டனர். அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் சர்ச்சை :

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. ஆனால் இதில் வந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் போன்றவற்றினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும் அதனையெல்லாம் சமாளித்து சமீபத்தில் கூட பிக் பாஸ் சீசன் 6 விருந்தினராக கலந்து கொண்டார். அதோடு கடந்த ஆண்டு வெளியா “நண்பகல் நேரத்து மயக்கம்” மலையாளம் டப் படத்தில் நடித்திருந்தார்.

வைரலாகும் சிறிய வயது புகைப்படம் :

வெள்ளித்திரை, சின்னத்திரை தவிர்த்து பல விதமான போட்டோ ஷாட்களை நடத்தி அதனை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் ரம்யா பாண்டியனின் சிறிய வயது புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

கடந்த 1993ஆம் தேதி ஜூன் மாதம் 18 ஆம் நாள் வெளியான சிறுவர் மலர் புத்தகத்தில் ராமயா பாண்டியனும் அவரது தங்கை சுந்தரியும் இடப்பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்நிலையில் இந்த 25ஆண்டிற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement