நான் பிக் பாஸ் வீட்டுக்கு போனால், முதல்ல இதை பத்தி தான் சொல்வேன். ரம்யா பாண்டியன் சொந்த தம்பி அளித்த பேட்டி.

0
8208
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கதை இருப்பது புதிதான விஷயம் கிடையாது. அந்த வகையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேப்ரில்லாவிற்கும் ட்ராக் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாலாஜியோ கேப்ரில்லாவை தங்கை என்று கூறிவிட்டார். தற்போது பாலாஜி மற்றும் ஷிவானியின் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே காதல் இல்லை என்று இவர்கள் இருவரும் சொல்லிக் கொண்டு வந்தாலும் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பாலாஜி ஷிவானி காதலித்து வருகிறார்கள் என்றுதான் சூசகமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் பிக்பாஸ் என்றாலே அதில் ஒரு காதல் ஜோடி மட்டும் இருந்தால் போதாது இல்லையா.

அதனால் கடந்த சில நாட்களாக சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியனை இனைத்து ஒரு லவ் ட்ராக் கிளப்பி விட்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ரம்யா பாண்டியன் சகோதரர் பேசுகையில் ரம்யா பாண்டியன் எப்போதும் சிரித்துக்கொண்டே மிகவும் க்யூட்டாக இருக்கிறார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் . ஆனால், அவருக்கு கோபம் வந்தால் யாராலும் தாங்க முடியாது. அதே போல சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் லவ் ட்ராக் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது நான் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் ரம்யா பாண்டியனிடம் முதலில் உன்னையும் சோம் சேகரிக்கும் காதலிப்பதாக வெளியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் முதலில் சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement