அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்கும் போது நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ள ரம்யா – வீடியோ இதோ.

0
1846
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் நடித்துள்ள வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதுவரை இந்த தொடரை 3 இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். இந்தத் தொடர்களில் நடித்ததன் மூலம் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது. அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரிலேயே செம்பருத்தி தொடர் தான் டிஆர்பி கிங் என்று கூட சொல்லலாம்.இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்திக் முகிலன் என்ற வெப் சீரியசில் நடித்துள்ளார்.

இதில் ரம்யா பாண்டியனும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் அண்ணா யூனிவர்சிட்டியில் படிக்கும் போது சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷாவிற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு தொகுப்பாளினியாக சென்று உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement