கிளாமரில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய அவரது தங்கை கீர்த்தி பாண்டியன்.

0
250417
keerthi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ரம்யா பாண்டியனும் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். இவர் தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவர் பிரபலமானது என்னவோ மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் தான். மொட்டை மாடியில் புடவையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இவருக்கு குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பை கிடைக்க பின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.

-விளம்பரம்-

இதைத் தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ரம்யா பாண்டியனை பலரும் ஆரம்பத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்று தான் நினைத்தார்கள். ஆனால், உண்மையில் இவர் அருண் பாண்டியனின் உறவினரே தவிர மகள் கிடையாது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்

- Advertisement -

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.இருப்பினும் இந்த படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் அம்மணி கவர்ச்சியில் தனது சகோதரியான ரம்யா பாண்டியனையே மிஞ்சிவிட்டார். இவரது படு கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement