ரம்யா பாண்டியனின் தம்பிய பாத்தீங்க – அவரது சகோதரி சுந்தரி பாண்டியனை பார்த்துளீர்களா.

0
1574
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் ஆரியை தொடர்ந்து டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் கடந்த சில வாரங்களாகவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட ஆரி என்ன செய்கிறார் என்பதை தான் ரம்யா பாண்டியன் உன்னித்து கவனித்து வருகிறார்.

மேலும், ஆரியிடம் யாராவது சண்டை போட்டால் அவருக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் களம் இறங்கி விடுகிறார். ரம்யா பாண்டியனுக்கு பரசு பாண்டியன் என்ற சகோதரர் இருக்கிறார். சமீபத்தில் பிக் பாஸில் நடைபெற்ற Freeze Task-ன் போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். ஆனால், ரம்யா பாண்டியனுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அவருடைய பெயர் திரிபுரசுந்தரி பாண்டியன். இதோ அவரின் புகைப்படம்.

-விளம்பரம்-

Advertisement