போட்டோக்கே அசந்துட்டாங்க ரசிகர்கள், இதுல பிகினி ஷூட் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்.

0
35603
keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல்வேறு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அம்மக்களும் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர்.

- Advertisement -

அதில் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.இறுதியாக ‘அன்பிற்கினியால்’ படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில், சிறு வயதில் இருந்தே தான் ஒல்லியாக இருந்ததால் பலர் தன்னை ‘குச்சி’ என்று கேலி செய்ததாகவும், நடிக்க வந்த பின்னரும் அந்த கேலி தொடர்ந்தது.

அதனால் எனக்காக உடல் எடையை கூட்ட நினைத்து 6 மாத காலம் கடுமையாக முயற்சி செய்து உடல் எடையை கூட்டினேன். உடல் எடை கூட அதிகம் சாப்பிட வேண்டும் என்று காலை 5 மணிக்கு எல்லாம் கூட எழுந்து சாப்பிட்டேன். நான் பெற்று இருக்கும் ஒவ்வொரு 100கிராம் எடையும் என் கடின உழைப்பு தான் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் நடத்திய பிகினி போட்டோ ஷூட்டின் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை ஷாக்காகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement