அம்மன் கெட்டப்பில் வனிதாவையே மிஞ்சிய பிக் பாஸ் நடிகை – அதுவும் யாருன்னு பாருங்க.

0
12412
rekha
- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து வனிதா வெளியிட்ட அறிக்கையில், ஒருவர் கேலி செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அது என் குடும்பத்தினரும் இருந்தாலும் சரி என்பதை இந்த உலகுக்கே தெரியும். ஆனால், வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

-விளம்பரம்-

ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.கடுமையாக உழைத்து முன்னேறிய ஒரு மூத்தவர் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை தரம் தாழ்த்தி பார்ப்பது அவர்களை அவமானப் படுத்துவதை வேதனையாக உள்ளது. பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

வனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கடைசி எபிசோடில் காளி கெட்டப் போட்டு ஆடி இருந்தார். இந்த எபிசொட் வருவதர்க்கு முன்பாக ஓவர் பில்ட்டப் கொடுத்தார் வனிதா. ஆனால், காளி கெட்டப் போட்டு செம பல்ப் வாங்கினார். இப்படி ஒரு நிலையில் வனிதாவை தொடர்ந்து காளி கெட்டப் போட்டுள்ளார் ரேகா.

90ஸ் கால கட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ரேகா தற்போது சினிமாவில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், இவர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-
Advertisement