உங்க மேல இருந்த மரியாதையே போயிடுச்சி – மோசமாக மாறிய ரேஷ்மா பதிவிட்ட Grid புகைப்படம்.

0
53882
Reshma
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்தவர். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பின் இவர் வம்சம், வாணி ராணி, ஆண்டாள் அழகர், மரகத வீணை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி அவர்கள் தனது உடல் எடை குறைத்துள்ளார். அவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிக்க வைக்கிறார்.

சமீபத்தில் நடிகை ரேஷ்மா புடவையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றின் Grid புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதாவது ஒரு பெரிய புகைப்படம் சின்ன சின்ன புகைப்படமாக பிரிந்து இருக்கும் அது ரேஷ்மாவின் profile – உள் சென்றால் தான் முழுமையாக தெரியும். ஆனால், இந்த புகைப்படத்தின் சில பகுதிகள் ரேஷ்மா வேண்டுமென்றே பதிவிட்டுள்ளார் என்று நினைத்த ரசிகர்கள் ரேஷ்மாவை கொஞ்சம் வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், மீரா மிதுனுக்கே டப் கொடுப்பீர்கள் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன் ரேஷ்மா பங்குபெற்ற பிக் பாஸ் சீஸனின் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி கூட ரேஷ்மாவின் புகைப்படம் ஒன்றிற்கு ‘நீ grid புகைப்படத்தை பதிவிட நினைத்துள்ளாய் . ஆனால், அது தவறாக முடிந்து இருக்கிறது டார்லிங்’என்று கமன்ட் செய்துள்ளார். அதற்கு ரேஷ்மா, யாருக்கு தவறாக இருக்கிறது டார்லிங் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement