பெண்களுக்கான சிறந்த உள்ளாடை எது – யூடுயூப் சேனல் ஆரம்பித்த பிக் பாஸ் 3 நடிகை. (மீரா மிதுன் இல்லைங்க)

0
1327
Reshma
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதுவும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பெரும் வெற்றியடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கு பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரேஷ்மாவும் ஒருவர். “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதிலும் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்துகொடுத்தது.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.தற்போது பெரும்பாலான சின்னத்திரை நடிகர் நடிகைகள் யூடியூப் பக்கத்தை வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது ரேஷ்மாவும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் பிரபலங்கள் ஆரம்பிக்கும் யூடியூப் பக்கத்தில் அழகு குறிப்புகள், டயட், உடற்பயிற்சி போன்றவற்றை பற்றித்தான் வீடியோக்கள் இருக்கும். ஆனால், ரேஷ்மா ஆரம்பித்துள்ள இந்த யூ டியூப் சேனலில் பல்வேறு விதமான அந்தரங்க விஷயங்களை பற்றி ரேஷ்மா பதிவிட இருக்கிறாராம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பெண்கள் அணியும் சிறந்த உள்ளாடைகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறாராம்.

-விளம்பரம்-
Advertisement